--- --:--:-- --

அரசு பள்ளியில் அதிர்ச்சி.. திடீரென மயங்கி விழுந்த மாணவர்கள்..!

Vertigo illness concept. Man hands on his head felling headache

Vertigo illness concept. Man hands on his head felling headache dizzy sense of spinning dizziness,a problem with the inner ear, brain, or sensory nerve pathway.

உதகையில் போட்டி போட்டு அதிகளவு ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொண்ட பள்ளி மாணவர்கள் மயக்கமடைந்ததால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருக்கு நேற்று சத்து மாத்திரை வழங்கப்பட்டது. இதில் எட்டாம் வகுப்பு மாணவிகள் சிலர் போட்டி போட்டு அதிக அளவு ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொண்டுள்ளனர்.

 

இதனால் மயக்கமடைந்த எட்டு மாணவர்கள் உடனடியாக உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் .இது நான்கு மாணவிகள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

 

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து உதகை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon