--- --:--:-- --

தகாத முறையில் உற்றுப் பார்த்தார் என உபர் ஓட்டுநர் மீது பெண் பத்திரிக்கையாளர் புகார்..!

3

uber ஆட்டோவில் பயணித்த பொழுது ஓட்டுனர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக டெல்லி பெண் பத்திரிகையாளர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இது குறித்த வீடியோ ஒன்றையும் அவர் பகிர்ந்திருக்கிறார்.

 

டெல்லியில் உள்ள பிரபல ஊடகத்தில் பணிபுரிந்து வரும் பெண் பத்திரிகையாளர் ஒருவர் தனது நண்பரை பார்க்க செல்வதற்காக உபர் ஆட்டோவை புக் செய்து இருக்கிறார். ஆட்டோவில் பயணிக்கும் பொழுது ஓட்டுனர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அவர் கூறியிருக்கிறார்.

 

இது குறித்து அவர் கூறும் பொழுது எனது வீட்டில் இருந்து நண்பர் தங்கி இருக்கும் இடத்திற்கு செல்வதற்காக ஆட்டோ புக் செய்தேன். சிறிது நேரத்தில் அந்த ஓட்டுநர் என்னை ஆட்டோவில் சைடு கண்ணாடி வழியாக பார்ப்பதை கவனித்தேன். இதனால் நான் இடது பக்க கண்ணாடியில் தெரியாத வண்ணம் சற்று வலது பக்கம் நகர்ந்து உட்கார்ந்து கொண்டேன்.

 

பின்னர் அவர் வலது பக்க கண்ணாடியில் பார்க்க ஆரம்பித்தார். இதனால் எந்த கண்ணாடியிலும் தெரியாத வண்ணம் இடது பக்க மூலைக்கு நகர்ந்து ஒட்டி அமர்ந்து கொண்டேன். ஆனாலும் அந்த நபர் பின்னால் திரும்பி திரும்பி என்னை பார்த்துக் கொண்டே வந்தார்.

 

நான் முதலில் uber-ல் பாதுகாப்பு அம்சத்தை பயன்படுத்த முயற்சித்தேன். ஆனால் எந்தப் பயனும் இல்லை. மீண்டும் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்ட பொழுது நெட்வொர்க் சரியாக இல்லாததால் சரியாக கேட்கவில்லை. அதன் பிறகு அந்த ஓட்டுனரை சிறு வீடியோ எடுத்தேன் என்று ட்வீட் செய்துள்ளார்.

 

மேலும் அவரை புகைப்படம் எடுத்துக் கொண்டு இது குறித்து புகார் அளிப்பேன் என ஓட்டுனரிடம் கூறிய பொழுது புகார் அளித்துக்கோ எனக் கூறியதாகவும் அந்த பெண் பத்திரிகையாளர் குறிப்பிட்டுள்ளார்.

 

Right Menu Icon