--- --:--:-- --

ஈரோடு தேர்தலில் ஒரே ஒரு டிஜிட் வாக்கு பெற்ற வேட்பாளர்கள்..!

9

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 14 சுயேட்சை வேட்பாளர்கள் ஒற்ற இலக்கத்திலும் 49 சுயேட்சிய வேட்பாளர்கள் இரட்டை இலக்கத்திலும் வாக்குகளை பெற்றுள்ளனர். ஈரோடு இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு தொடங்கிய நாள் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் அதிக கவனத்தில் இருந்து வந்தனர்.

 

இறுதியாக மொத்தம் 77 வேட்பாளர்கள் கணத்தில் இருந்தனர். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முதலிடத்தையும், அதிமுக வேட்பாளர் தென்னரசு இரண்டாவது இடத்தையும் பிடித்தனர்.

 

நாம் தமிழர் கட்சி, தேமுதிக கட்சிகள் மூன்றாவது. நான்காவது இடத்தை பிடித்த நிலையில் ஐந்தாவது இடத்தை 798 ஓட்டுகளுடன் நோட்டா கைப்பற்றியது. 14 சுயேட்சை வேட்பாளர்கள் ஒற்றை இலக்கத்திலும், 49 சுயேட்சை வேட்பாளர்கள் இரட்டை இலக்கத்திலும் 10 வேட்பாளர்கள் மூன்று இலக்கத்திலும் வாக்குகளை பெற்றிருந்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon