கொலிஜியம் முறையில் தேர்தல் ஆணையர்களை நியமிக்க கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு..!
கொலிஜியம் முறை போன்ற தலைமை தேர்தல் ஆணையர்களை நியமிக்க கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசனம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. தேர்தல் ஆணையர்களை கொலிஜியம் முறையில் நியமிக்க கோரி அஸ்வினி குமார் உமா பாத்தியா உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்கை நீதிபதி கே.என்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரிக்கிறது. வழக்கு விசாரணையில் தேர்தல் ஆணையர்களை கொலிஜியம் போன்ற பாரபட்சமற்ற அமைப்பின் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தின் நடைபெறும்போது தேர்தல் ஆணையரை மத்திய அரசின் நியமித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமிக்கப்பட்டது குறித்த கோப்புகளை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தேர்தல் ஆணையர்களை கொலிஜியம் முறையில் நியமிக்க கோரிய மனுக்கள் மீது உச்ச நீதிமன்ற அரசியல் சாசனம் அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





