ஈரோடு இடைத்தேர்தல் : வாக்கு எண்ணிக்கை தீவிரம்..!
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது .முதலில் தபால் வாக்குகள் என்னப்பட்டுள்ளன. அதில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முன்னிலை கண்டுள்ளார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்குப்பதிவு தொடங்கப்படும்.
இந்த முறை முதியோர்களிடமும் மாற்றித் திறனாளிகளிடமும் நேரடியாக வீட்டிற்கு சென்று வாக்கு சேகரிக்கப்பட்டது. இந்த வாக்குகள் தபால் வாக்காக கருத்தில் கொள்ளப்படும். 16 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் சித்தோடு பகுதியில் உள்ள அரசினர் பொறியியல் கல்லூரி மூன்றடுக்கு பாதுகாப்பு வளையத்தில் உள்ளது. காவல்துறை துணை ராணுவம் 450 பேர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





