நடுரோட்டில் ஆண் நண்பருடன் சண்டையிட்ட துணை நடிகை..!
மதுரையில் நடுரோட்டில் சண்டை போட்ட மும்பையை சேர்ந்த துணை நடிகை மற்றும் அவரது ஆண் நண்பருக்கு அறிவுரை கூறி சொந்த ஊர் செல்லும் படி காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.
மதுரை பொன்மேனி நெடுஞ்சாலையில் இளம் ஜோடி ஒன்று சண்டையிடுவதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. இதன் பேரில் போலீசார் வந்து இரண்டு பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் இளம்பெண் உத்தர பிரதேசத்தை சேர்ந்த துணை நடிகை என்பதும் அவருடன் இருந்தது பீகாரை சேர்ந்த நண்பர் நிதிஷ்குமார் என்பவரும் கோவையில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் பங்கேற்றிவிட்டு சுற்றுலாத்தலங்களை சுற்றி பார்க்க முடிவு செய்து மதுரை வந்த இடத்தில் சண்டையிட்டுக் கொண்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் பணத்தை எடுத்துக் கொண்டதாகவும் நிதிஷ்குமார் மீது அங்கீதா புகார் தெரிவித்தார். விசாரணை நடத்தி போலீசார் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.





