மகளின் கண் முன்னே தந்தை உயிரிழந்த சம்பவம்..!
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் மகள் கண் முன்னே முன்னாள் ராணுவ வீரர் உடல் நசுங்கி உயிரிழந்தார். அருளானந்தம் என்பவர் இருசக்கர வாகனத்தில் தனது மகளை கல்லூரிக்கு அழைத்து சென்றுள்ளார்.
தேவகோட்டை சாலையில் கோபாலபுரம் அருகே வளைவு ஒன்றில் திரும்ப முயன்ற பொழுது எதிரே அதிவேகமாக வந்த இனோவா கார் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் அருளானந்தம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.





