--- --:--:-- --

சென்னையில் பழிக்கு பழியாக நடந்த கொலை..!

10

சென்னை வண்டலூர் அருகே மீன் வியாபாரி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த மண்ணைவாக்கம் பகுதியை சேர்ந்த பார்த்திபன் மற்றும் அவரது மனைவி ஜனாக்கா இருவரும் சேர்ந்து வடலூர் அடுத்த ஓட்டேரி அருகே மீன் வியாபாரம் செய்து வருகின்றனர்.

 

காரில் வந்து ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் தாங்கள் வைத்திருந்த கத்தியால் பார்த்திபன் மற்றும் ஜனாவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில் பார்த்திபனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போது விசாரணை நடத்தியதில் பார்த்திபனின் 15 வயது மகளை மடிவாக்கம் பகுதியை சேர்ந்த பிரேம்குமார் என்பவர் செல்போன் மூலம் தொடர்ந்து தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

 

இதன் காரணமாக பார்த்திபனின் மகள் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து பிரேம்குமாரை கொலை செய்ததால் பழிக்கு பழியாக கொலை நடந்திருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon