--- --:--:-- --

அறுவை சிகிச்சை முடிந்து டெல்லி திரும்பினார் லாலு பிரசாத் யாதவ்..!

3

சிங்கப்பூர் மருத்துவமனையில் சிறுநீரக மாற்ற அறுவை சிகிச்சை செய்து கொண்ட லாலு பிரசாத் யாதவ் இன்று டெல்லி திரும்பினார். ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு உடல்நலக்குறைவு காரணமாக தற்பொழுது ஜாமினில் வெளிவந்துள்ளார்.

 

பீகார் மாநிலம் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவிற்கு கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி சிங்கப்பூர் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரது மகள் சிறுநீரகத்தை தானமாக அளித்தார்.

 

சிகிச்சை முடிந்து தனது மருத்துவமனை கண்காணிப்பில் இருந்த நாலு பிரசாத் யாதவ் இன்று டெல்லி திரும்பினார், அவருக்கு தானம் அளித்த ரோகிணி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் சிங்கப்பூரிலிருந்து டெல்லி திரும்பினார்கள்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon