--- --:--:-- --

வனப்பகுதி வழியாக சென்ற 108 ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை..!

2

சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதி வழியாக 108 ஆம்புலன்சில் சென்று கர்ப்பிணி பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. தாளவாடி மலைப்பகுதியை சேர்ந்த ஆஷா என்ற கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

 

தகவல் அறிந்து 108 ஆம்புலன்ஸ் அவர் ஏற்றிக்கொண்டு சாம்ராஜ் நகர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அந்த ஆம்புலன்ஸ் வனப்பகுதி அருகே சென்ற பொழுது அந்தப் பெண் ஓடும் வாகனத்திலேயே பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

 

தாயும் சேயும் தாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் 108 ஆம்புலன்ஸில் நடைபெற்ற இரண்டாவது பிரசவமாகும்.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon