சடலத்தை சுமந்து கொண்டு போலீஸ் உடன் சண்டை போட்ட மக்கள்..!
புதுக்கோட்டை மாவட்டம் தஞ்சூரில் சுடுகாட்டுக்கு செல்ல பொதுபாதை இல்லாததால் மக்கள் சடலத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கிராம மக்களும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வரும் சுடுகாட்டுக்கு பொதுபாதை இல்லாததால் பட்டா நிலங்கள் வழியாக சடலங்களை கொண்டு செல்லுகின்றனர். இந்நிலையில் அந்த வழியாக சடலங்களை கொண்டு செல்ல எதிர்ப்பு எழுந்த நிலையில் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் சடலங்களை அடக்கம் செய்ய வருவாய் துறையினர் இடம் ஒதுக்கி உள்ளனர்.
இதற்கும் எதிர்ப்பு எழுந்த நிலையில் நேற்று இறந்தவரின் உடலுடன் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது போலீஸாருக்கும் கிராம மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





