ஆன்லைன் படம் நடத்திய ஆசிரியர் மீது பாய்ந்த கத்தி..!
உத்திரபிரதேசத்தில் ஆன்லைனில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் படுகொலை செய்யப்பட்டது மாணவர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியது. உத்திரபிரதேசத்தில் கோவா மாவட்டத்தில் கிருஷ்ணகுமார் யாதவ் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இவர் தனது சகோதரியுடன் ஒன்றாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் சகோதரியுடன் ஒரு ஆண் பழக்கம் ஏற்படுத்தி உள்ளார். இதற்கு கிருஷ்ணகுமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தனது மாணவர்களுக்கு செல்போன் மூலம் கிருஷ்ணகுமார் ஆன்லைன் வழியே பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
அப்பொழுது வந்து இரண்டு பேர் கிருஷ்ணகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் மோதல் முற்றியதை அடுத்து தாக்கி கொலை செய்துள்ளனர். இந்த காட்சிகள் போனில் வீடியோவாக பதிவாகியதை பார்த்து மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார் மொபைல் ஃபோனை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் இருவரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





