பாறை இடுக்கில் சிக்கி தவித்த நபர்..!
செகந்திராபாத் அருகே மலை மீது இருந்து தவறி விழுந்த இளைஞர் ஒருவர் இரண்டு பலகைகளுக்கு இடையே சிக்கினார். செகந்திராபாத் அருகே உள்ள மலை மீது நடந்து சென்ற ராஜு என்பவர் திடீரென்று கால் தவறி கீழே விழுந்து இரண்டு பாறைகளுக்கு இடையே உள்ள இடுக்கில் சிக்கிக் கொண்டார்.
பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் பாறை இடுக்கில் சிக்கிக் கொண்ட இளைஞருக்கு தண்ணீர் உணவாக கொடுத்த பின்னர் பத்திரமாக வெளியே எடுத்து மீட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





