இறப்பு சான்றிதழுக்காக லஞ்சம் வாங்கிய அதிகாரி..!
விழுப்புரம் மாவட்டத்தில் இறப்பு சான்றிதழ் வழங்குவதற்கு கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் வாங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. செஞ்சி அடுத்த கீழனாபட்டு கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் அரசு போக்குவரத்து பணிமனையில் ஓட்டுனராக பணியாற்றி வந்த நிலையில் உடல் நலக்குறைவால் 10 நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார்.
இந்நிலையில் இறப்பு சான்றிதழ் பெறுவதற்காக விண்ணப்பித்தவர் இளைய மகன் சந்திரசேகரிடம் கிராம நிர்வாக அலுவலர் நாராயணசாமி லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





