--- --:--:-- --

நாய் துரத்தியதால் வாகனத்தில் இருந்து சரிந்து விழுந்து காயமடைந்த மாணவிகள்..!

8

தாம்பரம் மாநகராட்சி 25 வது வார்டில் விஷ்விஷா தெருவை சேர்ந்த பள்ளி சிறுமிகள் இருவர் டியூஷன் முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும் வழியில் தெரு நாய் ஒன்று துரத்தியது.

 

இதனால் இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்ததில் ஒரு சிறுமிக்கு தலையில் பலத்த காயம்பட்டது. தாம்பரத்தில் தெரு ஒன்றுக்கு பத்து முதல் 15 நாய்கள் மாநகராட்சி முழுவதும் தற்பொழுது உலா வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon