அமெரிக்காவில் கொரோனா அவசரநிலை.. அதிபர் முக்கிய தகவல்..!
அமெரிக்காவில் கொரோனா அவசரநிலை மே 11ஆம் தேதியுடன் முடிவுக்கு வரும் என்று அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோபைடன் பதவியேற்றதிலிருந்து அவசரநிலை நீட்டிக்கப்பட்டது.
கொரோனா தடுப்பூசி பல்வேறு கட்டங்களாக மக்களுக்கு செலுத்தப்பட்டன. தற்பொழுது அமெரிக்காவில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகின்றனர்.
இந்நிலையில் அவசர நிலை மே 11ஆம் தேதியுடன் முடிவுக்கு வரும் என்று அதிபர் ஜோபைடன் அறிவித்துள்ளார். மக்கள் தங்கள் செயல்பாடுகளை எந்த தடையும் இல்லாமல் செய்து வருகின்றனர் எனவும், தொற்றுநோய் முடிந்து விட்டது எனவும் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





