--- --:--:-- --

சாதி பெயரை கூறி திட்டியதாக பாஜக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கைது..!

11

ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் சாதி பெயரை கூறி தரக்குறைவாக திட்டியதால் பட்டியலினத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் தற்கொலைக்கு முயன்றதால் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மயிலாடுதுறை கிராமத்தை சேர்ந்த ராஜா 5 ஏக்கர் புறம்போக்கு நிலத்தில் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருவதாக தெரிகிறது.

 

தொடர்ந்து விவசாயம் செய்ய வேண்டுமானால் ஒரு லட்சம் ரூபாய் தர வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவரான சுந்தரா கேட்டதாக சொல்லப்படுகிறது. சாதி பெயரை கூறி தரக்குறைவாக திட்டியதாக கூறி ராஜா வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon