--- --:--:-- --

அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சென்ற பெண்ணுக்கு கருத்தடை செய்த மருத்துவர்..!

6

ராமநாதபுரம் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் இளம் பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இராமநாதபுரம் அருகே உள்ள இளம்பெண் வைஜயந்தி மாலாவுக்கு கடந்த ஆண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகப்பிரசவம் மூலம் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த நாட்களில் வைஜெயந்திமாலாவுக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டது.

 

இதையடுத்து ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற வைஜெயந்தி மாலாவுக்கு பரிசோதனை செய்த மருத்துவர் கருத்தடை சாதனம் பொருத்தி தையல் போட்டுள்ளார். மீண்டும் கடுமையான வலி ஏற்பட்டதால் வைஜெயந்திமாலா தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

 

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் கருக்குழாய் சேர்த்து தையல் போட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் வைஜெயந்தி மாலாவுக்கு குழந்தை பிறக்காது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். தனக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் வைஜெயந்திமாலா கோரிக்கை வைத்துள்ளார்.

 

Right Menu Icon