விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று திறப்பு..!
தமிழகத்தில் அரையாண்டு விடுமுறைக்கு பின் பள்ளிகள் மீண்டும் இன்று திறக்கப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி முதல் அரையாண்டு விடுமுறை விடப்பட்டது.
கிறிஸ்துமஸ் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நிறைவடைந்ததை தொடர்ந்து பள்ளிகள் மீண்டும் இன்று திறக்கப்படுகின்றன. தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பயிற்சியில் பங்கேற்பதால் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது.
6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் அரையாண்டு விடுமுறை முடித்து இன்று முதல் வகுப்புகளுக்கு செல்ல உள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





