--- --:--:-- --

தமிழகத்தில் களைகட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்..!

12

மிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்தன. தமிழகத்தில் காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் பொதுமக்களுடன் இணைந்து நள்ளிரவில் ஆட்சியர், எஸ்பி ஆகியோர் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.

 

புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 2022-ம் ஆண்டு விடைபெற்று 2023-ம் ஆண்டை உற்சாகமாக நாம் வரவேற்று வருகிறோம்.

 

உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் கடும் கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon