முதலுதவி அளிக்க வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனரை தாக்கிய போதை இளைஞர்..!
மதுரை மேலூர் அருகே முதலுதவி சிகிச்சை அளிக்க வந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளரை கஞ்சா போதையில் இருந்த ஆசாமி கத்திரிக்கோலால் குத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. பதினெட்டாகுடியில் இருசக்கர வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்திற்கு உள்ளானது.
தகவலறிந்து வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனம், காயமடைந்தவர்களை ஏற்றிக்கொண்டு சென்றது. செல்லும் வழியில் கஞ்சா போதையில் இருந்த ஆரப்பாளையத்தை சேர்ந்த முத்து பாரதி, ஆம்புலன்ஸ் பணியாளர் விமல் மீது கத்தரிக்கோலை கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த விமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கத்தரிகோலால் குத்திய நபரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





