கொரோனா பரவல் : நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்..!
சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் வேகம் எடுத்து இருப்பதால் நாட்டு மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
மனதின் குரல், வானொலி நிகழ்ச்சி மூலமாக மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் வேகம் எடுத்திருப்பதாக கூறினார்.
எனவே முக கவசங்கள் அணிவது, கைகளை தூய்மைப்படுத்துவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு நாட்டு மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
சுகாதாரத் துறையில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு சவால்களை நாம் முறியடித்திருப்பதாகவும் கூறினார். இந்தியா வேகமாக வளர்ந்து உலக பொருளாதாரத்தில் ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





