--- --:--:-- --

காதலனுடன் சென்ற மகளை தீயிட்டு கொளுத்திய தந்தை..!

18

காதலுடன் ஓடி சென்ற மகளை திருமணம் செய்து வைப்பதாக கூறி அழைத்து வந்து தந்தையை எரித்துக்கொண்ட கொடூரம் மகாராஷ்டிராவில் அரங்கேறியுள்ளது.

 

ஜால்னா பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி தான் காதலித்து வந்த உறவினருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். சிறுமியின் தந்தை, இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக கூறி மகளை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

 

உறவினர்களை அழைத்து இருவருக்கும் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. திருமணத்திற்காக வந்த மகளை இழுத்துச் சென்ற தந்தை மற்றும் சிறுமியின் உறவினர், கழுத்தில் கயிற்றை மாட்டி மரத்தில் தொங்கவிட்டுள்ளனர்.

 

அதன் பிறகு சிறுமி இறந்ததால் ஆதாரத்தை அழிக்க உடலை எரித்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் உறவினர்கள் கண் முன் நடந்தும் தடுக்க யாரும் முன் வரவில்லை. தகவல் அறிந்து சென்ற போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றியதுடன் குற்றவாளிகளை கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon