--- --:--:-- --

விவாகரத்தான பெண் மற்றொரு இளைஞரை காதலித்ததால் சிறை..!

17

சூடானில் திருமணம் ஆகி விவாகரத்தான பெண் மற்றொரு இளைஞரை காதலித்ததால் அவருக்கு ஆறு மாத காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது.

 

அங்கு குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்குள்ள ஒயிட் மேன் மாகாணத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த சூழலில் அவர் தனிமையில் இருந்ததை பார்த்த அந்த பெண்ணின் உறவுக்காரர் ஒருவர் அந்த இளைஞரை கொலை செய்தார்.

 

இதையடுத்து திருமணத்திற்கு பின் கணவர் இல்லாத அந்த பெண் மற்றொரு ஆணுடன் நெருக்கமாக இருந்ததால் அந்த பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் அந்த பெண்ணை கல்லால் அடித்து மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்டது. அதற்கு சர்வதேச அளவில் எதிர்ப்புகள் எழுந்ததால் தண்டனை வாபஸ் பெறப்பட்டு அவருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon