அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கை விசாரிக்க தடை..!
அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. 2001 ஆம் ஆண்டில் இருந்து 2006ல் அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
விசாரணைக்கு இடைக்கால தடைவித்து வழக்கு ஜனவரி 30 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.





