--- --:--:-- --

டெல்லியில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு..!

15

ஜி 20 மாநாட்டு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு டெல்லியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சீனா, ரஷ்யா உள்ளிட்ட 20 நாடுகளின் கூட்டமைப்பான ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் தலைமை இந்தியா ஏற்றுள்ளது.

 

ஜி 20 உச்சி மாநாடு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கிடையே நாடு முழுவதும் 200 இடங்களில் ஜி20 மாநாடு தொடர்பான கருத்தரங்க கூட்டங்கள் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

இது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெறுகிறது. மாநில முதலமைச்சர் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்ற முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon