காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது வீண் என கூறிய பிரதமர் மோடி..!
காங்கிரஸ் கட்சியிடம் கட்சிக்கான திட்டம் இல்லாததால் அவர்களுக்கு வாக்களிப்பது வீண் என்று தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் சட்டமன்றத்திற்கு அடுத்த மாதம் ஒன்று மற்றும் ஐந்தாம் தேதிகளில் இரு கட்டங்களாக வாக்கு பதிவு நடைபெற உள்ளது.
இதை ஒட்டி ராஜ்கோட் உள்ளிட்ட இடங்களில் பாரதிய ஜனதாவின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி பரப்புரை கூட்டங்களில் கலந்துகொண்டு வாக்கு சேகரித்தார். அப்பொழுது குஜராத் தொடர்ச்சிக்கான மாபெரும் பாய்ச்சலை முன்னெடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டதாகவும் அதனை மேற்கொள்ளும் திறன் காங்கிரஸ் கட்சிக்கு இல்லை என்றும் கூறினார்.
நர்மதை அணைத்திட்டத்திற்கு தடை ஏற்படுத்திய பெண்ணோடு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்வதாகவும் விமர்சித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





