--- --:--:-- --

தமிழகத்தில் இன்று ஆறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு..!

2

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் இன்று ஆறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி சென்னையிலிருந்து 670 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

 

இதனால் இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய ஆறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.

 

செவ்வாய்க்கிழமை திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஓட்டியுள்ள மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் கேட்டுக் கொண்டுள்ளது.

 

இதனிடையே சென்னை, நாகை, காரைக்கால், தூத்துக்குடி, பாம்பன் புதுச்சேரி துறைமுகங்களில் புயல் உருவாக வாய்ப்புள்ளது என்பதை அறிவிக்கும் வகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon