ஏழு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி நான்கு இடங்களில் வெற்றி..!
ஆறு மாநிலங்களில் உள்ள ஏழு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி நான்கு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆறு மாநிலங்களில் காலியாக இருந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த மூன்றாம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இதன் வாக்கு எண்ணிக்கை முடிவில் நான்கு தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது. பிஹார் கோபால் கஞ்ச் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் குசம் தேவி 1794 வழக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதை போன்று ஹரியானா மாநிலம் ஆதம் பூர் இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் விஷ்ணு 15,740 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தினார். உத்திரப்பிரதேச மாநிலம் கோகர்ணா தொகுதி மற்றும் ஒரிசாவின் தாம்நகர் தொகுதியையும் பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் அங்கேரி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தாக்கரே தலைமையில் ஆன சிவசேனா அணியை சேர்ந்த ருத்ஜா வெற்றி பெற்றுள்ளார். மோகமா தொகுதியில் போட்டியிட்ட ராஷ்ட்ரிய ஜனதா தள வேட்பாளர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.





