--- --:--:-- --

ஆண்டுதோறும் மூன்று இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் இலவசம்..!

4

மாச்சலப் பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சியும் குஜராத்தின் காங்கிரஸ் கட்சியும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன. ஹிமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை ஆளும் பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது.

 

8 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் மூன்று இலவச சமையல் எரிவாயு சிலிண்டர், அரசு வேலைகளில் பெண்களுக்கு 33% ஒதுக்கீடு, பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள், கல்லூரி மாணவிகளுக்கு ஸ்கூட்டர் உள்ளிட்ட வாக்குறுதிகளை பாரதிய ஜனதா அறிவித்துள்ளது.

 

11 அம்சங்கள் கொண்ட இந்த அறிக்கையில் பொது சிவில் சட்டத்தை அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் பாரதிய ஜனதா காங்கிரஸ், ஆம்ஆத்மி இடையே மும்முனை போட்டி நடைபெறுகிறது.

 

குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலில் இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் ஐந்தாம் தேதி நடைபெறும் நிலையில் 8 முக்கிய அம்சங்கள் அடங்கிய வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. அதில் 500 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள், 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும்.

 

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்பது உள்ளிட்டவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குறுதிகளை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். குஜராத் மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

 

Right Menu Icon