கிணற்றில் தவறி விழுந்த ஆட்டுக்குட்டி..!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கிணற்றில் தவறி விழுந்த ஆட்டுக்குட்டி பத்திரமாக மீட்கப்பட்டது. அய்யனார் புறத்தில் 40 அடி ஆழ கிணற்றில் ஆட்டுக்குட்டி ஒன்று தவறி விழுந்ததாக கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கயிறு கட்டி உள்ளே இறங்கி பத்திரமாக ஆட்டுக்குட்டியை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
தீயணைப்பு வீரர்களின் இந்த சேவையை பொதுமக்கள் பாராட்டினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





