தமிழக சட்டசபை கூட்டம் நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது..!
தமிழக சட்டசபை பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூட உள்ள நிலையில் அதிமுகவின் தலைமை விவகாரம் சட்டசபையில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டசபை கூட்டம் நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது.
கூட்டம் தொடங்கியதும் முன்னாள் சபாநாயகர் முத்தையாவுக்கும், உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம்சிங் யாதவும் மறைவுக்கும் இரங்கல் குறிப்பு வாசிக்கப்படுகின்றன.
அதன் பிறகு 11 மணியளவில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெறுகிறது. இதில் சட்டசபை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது தெரியவரும்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





