மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!
மேட்டூர் அணையிலிருந்து 1,20,000 கன அடி நீர் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல் மற்றும் மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணை நிரம்பி வரும் நிலையில் அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று இரவு மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சத்து 45 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு நிலையில் தற்போது ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் மீண்டும் அதிகரிக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து அதிகமான தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி கரையோரம் உள்ள 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





