ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை நெஞ்சுவலியால் உயிரிழப்பு..!
ரயிலில் தள்ளிவிட்டு மாணவி சத்யாவை கொலை செய்த சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் மாணவியின் தந்தை நெஞ்சுவலியால் நேற்றிரவு உயிரிழந்துள்ளார். இது தொடர்பான நேற்றிரவு பரங்கிமலை ரயில் நிலையத்தில் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது.
கல்லூரி செல்வதற்காக சத்யா என்ற கல்லூரி மாணவி அங்கு நின்றிருந்தார். அவரை பின்தொடர்ந்த சதீஷ் இளைஞர் பின் தொடர்ந்து வந்து காதலை ஏற்குமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
கல்லூரி முடிந்து வரும் போது அவரது உறவினர் ஒருவருடன் திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில் இது குறித்து பேசுவதற்காக வந்த சதீஷ் ஆத்திரமுற்று இளம்பெண்ணை ரயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார்.
இந்த நிலையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு சதீஷ் தேடப்பட்டு வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். மகள் இறந்த துக்கம் தாங்காமல் தந்தையின் நெஞ்சுவலியால் உயிரிழந்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




