--- --:--:-- --

கொதிக்கும் சாம்பாரில் தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

10

தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே கொதிக்கும் சாம்பாரில் விழுந்த ஒன்றரை வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. ஜீவா நகரில் அருணகிரி – சுகுணா தம்பதியினர் வசித்து வருகின்றனர்.

 

வீட்டில் சாம்பார் செய்து அதனை பாத்திரத்திலிருந்து அடுப்பிலிருந்து இறக்கி வைத்து விட்டு மாட்டிற்கு தண்ணீர் வைக்க வீட்டிற்கு வெளியே சென்றுள்ளார். அப்பொழுது தூக்கத்திலிருந்து எழுந்து வந்த ஒன்றரை வயதான அவர்களது மகள் தேன்மொழி நிலைதடுமாறி கொதிக்கும் சாம்பார் பாத்திரத்தில் விழுந்துள்ளார்.

 

குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்ததில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon