பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகும் முதல் போட்டியாளர்..!
விறுவிறுப்புக்கும், சண்டைக்கும் பஞ்சமில்லாமல் பிக் பாஸ் 6 நடைபெற்று வருகிறது. இதில் ஜி.பி. முத்து, அசல் கோலார், ஆயீஷா, அசீம், மகேஸ்வரி, அமுதவாணன், தனலட்சுமி உள்ளிட்ட 20 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
முதல் வாரமே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், பிக் பாஸ் வீட்டை விட்டு முதல் ஆளாக வெளியேற போவது யார் என்று சலசலப்பு துவங்கிவிட்டது. ஏற்கனவே அடுத்த வாரத்திற்கான நேரடியான நாமினேஷனில், ஆயீஷா, விக்ரமன், அசீம், உள்ளனர்.
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டை விட்டு முதல் நபராக தனலட்சுமி வெளியேறுவார் என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




