--- --:--:-- --

10ம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது..!

6

செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை அருகே படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார். கடப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சிவா.

 

பத்தாம் வகுப்பு மட்டுமே படித்த இவர் கடந்த சில ஆண்டுகளாக நோயாளிகளுக்கு அலோபதி மருத்துவம் பார்த்து மருந்து மாத்திரைகளை வழங்கி வந்துள்ளார். இவர் மீது சந்தேகம் கொண்ட ஆரம்ப சுகாதார நிலைய மேற்பார்வையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

சிவாவிடம் விசாரணை செய்த காவலர்கள் அவர் போலி மருத்துவர் என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon