வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்த 2 வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!
சென்னை மதுரவாயலில் வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்த 2 வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. எட்டாவது தெருவில் வசிக்கும் பிரகாஷ் – பூர்ணிமா தம்பதியின் 2 வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்த பொழுது பால்கனியிலிருந்து தவறி விழுந்தது.
தலையில் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் குழந்தை நல மருத்துவமனையில் 7 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





