--- --:--:-- --

விசிலை விழுங்கியதில் ஒரு வயது பெண் குழந்தை உயிரிழப்பு..!

3

சென்னையை அடுத்த பூந்தமல்லியில் விசிலை விழுங்கியதில் ஒரு வயது பெண் குழந்தை உயிரிழந்தது. பூந்தமல்லி பத்மாவதி நகர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் – வனஜா தம்பதியின் குழந்தையான கயல்விழி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார்.

 

அப்போது அருகில் இருந்த விசிலை எடுத்து விழுங்கியதால் குழந்தை மயங்கி விழுந்தது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். காவல்துறையினர் குழந்தையின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon