ஆதார் எண்ணை மின் இணைப்பு எண் உடன் இணைக்க அறிவுறுத்தல்..!
மானியம் பெறும் அனைத்து நுகர்வோர்களும் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண் உடன் இணைக்க தமிழக அரசு அரசாணை விதித்துள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தல்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் உத்தரவை தொடர்ந்து வங்கி கணக்குகள் எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது. வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் அரசிடமிருந்து மானியம் பெறும் அனைத்து மின் நுகர்வோர்களும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால் நுகர்வோர் அச்சப்பட தேவையில்லை எனவும் ஒரே வளாகத்தில் அதிக இணைப்புகள் வைத்திருப்பது, வாடகைதாரர்களிடம் அதிக மின் கட்டணம் வசூலிக்கப்படுவது எடுக்கப்படும் எனவும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொழிற்சாலைகள், கடைகள், நிறுவனங்கள் போன்ற மானியம் பெறாதவர்கள் மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க தேவையில்லை எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர். முதல் 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக பெறும் குடிசை நுகர்வோர், பொது வழிபாட்டுத்தலங்கள், விவசாய மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





