--- --:--:-- --

ஹிஜாப் தொடர்பாக நீதிபதி வழங்கிய இருவகை தீர்ப்பால் குழப்பம்..!

1

ர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து செல்வது குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கி உள்ளனர். கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அந்த மாநில அரசு தடை விதித்திருந்தது.

 

அந்த முடிவை கர்நாடக உயர் நீதிமன்றமும் உறுதி செய்திருந்தது. இந்த நிலையில் கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இஸ்லாமிய மாணவிகளும், அகில இந்திய இஸ்லாமிய தனி சட்ட வாரியமும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது.

 

மனுவை விசாரித்த நீதிபதிகள் இருவரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். நீதிபதி ஹிஜாப் அணிவதற்கான தடையை உறுதி செய்வதோடு கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான அனைத்து மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தார்.

 

அதே சமயம் மற்றொரு நீதிபதியான சுதா ஹிஜாப் அணிந்து வர தடை இல்லை என தீர்ப்பளித்தார். ஹிஜாப் அணிந்து வருவது இஸ்லாமிய பெண்களின் உரிமை என குறிப்பிட்ட நீதிபதி மத நடைமுறைகளில் தலையிடுவது அவசியமில்லாதது எனவும் கர்நாடக உயர்நீதிமன்றம் தவறான முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

 

முரண்பட்ட தீர்ப்புகள் கிடைத்துள்ளதால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு மீண்டும் நகர்த்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon