தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!
தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 16,888 பேருந்துகளை இயக்க உள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்திருக்கிறது. தீபாவளி பண்டிகை வரும் 24ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில் பயணிகள் வசதிக்காக பேருந்துகள் இயக்குவது குறித்து சென்னையில் ஆலோசனை நடைபெற்றது.
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர். இதில் வரும் 21 மற்றும் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து மற்ற பெரு நகரங்களில் இருந்தும் பிற மாவட்டங்களுக்கு 16,888 பேருந்துகள் இயக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதில் 10 ஆயிரத்து 518 பேருந்துகள் பழையது என்றும் 6,320 சிறப்பு பேருந்துகள் எனவும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. 24, 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மக்கள் சொந்த ஊர் திரும்ப வசதியாக சிறப்பு பேருந்துகள் உட்பட மொத்தம் 13,152 பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





