மனைவியை காப்பாற்ற சென்ற தந்தையும் மகனும் பலி..!
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மின்சாரம் பாய்ந்து தந்தையும் மகனும் உயிரிழந்தனர். வேப்பூர் அருகே சிறு பகுதியை சேர்ந்த பெரியம்மா என்பவர் தனது வீட்டில் இரும்பு கம்பி மீது துணியை காய வைத்துள்ளார்.
அந்த இரும்புக் கம்பி அருகில் இருந்த மின்சார கம்பத்தில் கம்பியில் பட்ட நிலையில் எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்தது. அப்பொழுது பெரியம்மா மீது மின்சாரம் பாய்ந்தது. அப்போது அவரை காப்பாற்ற முயன்ற கணவர் மீதும் மகன் மீதும் மின்சாரம் பாய்ந்தது.
இதில் கணவரும் மகனும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மின்சாரம் தாக்கி பெரியம்மா காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




