--- --:--:-- --

அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது..!

10

ரபரப்பான சூழலில் அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. ஒற்றை தலைமை வாரத்திற்கு பின்னர் ஜூலை 11-ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

 

எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாநில செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.

 

வரும் 17ஆம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர் தொடர்ந்து வரும் நிலையில் சட்டமன்ற கூட்டத்தொடரில் எதிர்கட்சியாக எவ்வாறு செயற்படுவது என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது .

 

உட்கட்சி விவகாரம் அதிமுகவின் 50 ஆவது ஆண்டு நிறைவு விழா பொதுக்குழுவில் ஓபிஎஸ் அணியை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon