--- --:--:-- --

பிறந்த குழந்தையின் சடலம் கழிவறையில் கண்டெடுப்பு..!

6

கன்னியாகுமரியில் தனியார் மருத்துவமனையில் பிறந்த குழந்தையின் சடலம் கழிவறையில் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ளன. பிரசவத்திற்காக அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

அவருக்கு பிறந்த குழந்தையை யாரோ தத்தெடுக்க சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து எந்த தகவலும் கூறாததால் உறவினர்கள் குழந்தையை தேடியுள்ளனர். இந்த நிலையில் மருத்துவமனைகளில் துணிகளால் சுற்றப்பட்ட நிலையில் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

 

தவறான சிகிச்சையால் குழந்தை இறந்து கிடந்ததை மறைக்கவே கழிப்பறையில் குழந்தையின் சடலத்தை மறைத்து வைத்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் குழந்தையின் சடலம் இருக்கும் அதிர்ச்சியூட்டும் காட்சி வெளியாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon