வெளிநாடு செல்லும் தம்பியை வழியனுப்ப வந்த அக்கா உயிரிழப்பு..!
பிரான்ஸ் நாட்டிற்கு வேலைக்கு செல்லும் தம்பியை வழியனுப்ப சென்னை விமான நிலையத்திற்கு வந்த அக்கா விமான நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுப்ரியா உடைய தம்பி வெங்கட் ராஜேஷ்.
மின் பொறியாளரான வெங்கட் ராஜேஷுக்கு பிரான்ஸ் நாட்டில் வேலை கிடைத்துள்ளது. வேலைக்கு செல்வதற்காக 1.30 மணிக்கு விமானத்தில் செல்வதற்காக சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளார். தனது கணவருடன் விமான நிலையம் வந்துள்ளார். இதனையடுத்து விமான நிலையத்தில் விமானத்தில் ஏறுவதற்காக உள்ளே சென்றபோது சுப்ரியா திடீரென மயங்கி விழுந்தார்.
இதனைக் கண்ட தம்பி அவசரமாக வெளியே ஓடி வந்து விமான நிலையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தூக்கி சென்று அனுமதித்த போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் திடீர் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.






