ஒன்றரை வயது குழந்தையின் தலையில் மாட்டிய சில்வர் பாத்திரம்..!
முதுகுளத்தூர் அருகே ஒன்றரை வயது குழந்தையின் தலையில் மாட்டிய சில்வர் பாத்திரத்தை அரை மணி நேரத்திற்கு பிறகு தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள பழனிச்சாமி என்பவருக்கு ஒன்றரை வயதில் ஒரு மகள் உள்ள நிலையில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது அங்கிருந்த சில்வர் பாத்திரம் குழந்தையின் தலையில் மாட்டிக்கொண்டது.
இதையடுத்து குழந்தையை பெற்றோர் தீயணைப்புத் துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையில் வீரர்கள் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு குழந்தையின் தலையில் மாட்டியிருந்த சில்வர் பாத்திரத்தை பத்திரமாக மீட்டனர்.






