--- --:--:-- --

மகனை அடிக்க பாய்ந்த கணவனை தடுத்த மனைவி அடித்து கொலை..!

4

நாகை அருகே மகனை அடிக்க பாய்ந்த கணவனை தடுத்த மனைவி உருட்டு கட்டையால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திருப்பூண்டியை சேர்ந்த கார்த்திக் – ரேவதி தம்பதியினர் தனது மகளுக்கு திருமண ஏற்பாடு செய்திருந்த நிலையில் சம்பவத்தன்று உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற மனைவி ரேவதி வீட்டிற்கு தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது.

 

ஆடு, மாடுகளுக்குத் தீனி வைக்காததால் ஆத்திரத்தில் இருந்த கணவருக்கு பராமரிக்க தவறிய தனது மகன் உருட்டு கட்டையால் அடிக்க பாய்ந்துள்ளார். அப்பொழுது குறுக்கே விழுந்து தடுத்ததால் ரேவதிக்கு தலையில் அடி விழுந்துள்ளது. ரேவதி பலியான நிலையில் கார்த்திகை போலீசார் கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon