அரசுப் பணிக்கு தாயும், மகனும் ஒரே நேரத்தில் தேர்வானதால் வியப்பு..!
கேரளாவில் மாநில அரசுப் பணிக்கு தாயும் மகனும் ஒரே நேரத்தில் வியப்பை ஏற்படுத்தி உள்ளனர். கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் பிந்து. 42 வயதான இவருக்கு 24 வயதில் விவேக் என்ற மகன் உள்ளார்.
பத்தாம் வகுப்பில் மகன் நன்றாகப் படிக்க வேண்டும் என்பதற்காக அவரை ஊக்கப்படுத்தும் வகையில் தனது கையில் புத்தகத்தை தூக்கியிருக்கிறார். பின்பு ஒரு கட்டத்தில் அரசு பணிக்கு முயற்சிக்கலாமே என்று ஆர்வத்தில் கணவரின் ஆதரவுடன் கோச்சிங் சென்டர் சென்று பயிற்சி பெற்ற இவர் மூன்று முறை தேர்தவில் தோல்வியை சந்தித்துள்ளார்.
இருப்பினும் நம்பிக்கை இழக்காத இவர் கல்லூரி படிப்பை முடித்த மகனையும் தன்னுடன் கோசிங் சென்டர் அழைத்து சென்றிருக்கிறார். இந்த நிலையில் அண்மையில் கேரள அரசு பணிக்கு நடந்த தேர்வை ஒன்றாக எதிர்கொண்ட தாயும் மகனும் வெற்றி பெற்றுள்ளனர்.





