--- --:--:-- --

பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பள்ளி மாணவி விஷம் அருந்தி தற்கொலை..!

6

விழுப்புரம் அருகே பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அரசு பள்ளி மாணவி விஷம் அருந்தி உயிரை மாய்த்துக் கொண்டார். பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவியின் காதலை பெற்றோர் கண்டித்துள்ளனர்.

 

இதனால் மனமுடைந்த பள்ளி மாணவி வீட்டில் பூச்சி மருந்து அருந்திவிட்டு பள்ளிக்கு சென்றுள்ளார். பள்ளியில் மயங்கி விழுந்த மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

 

Right Menu Icon